கருவறை
அகஸ்திய தாமரைச்செல்வியின் கருவறை
✦ ஒவ்வொரு ஆன்மாவும் தனக்குள் இருக்கும் பிரபஞ்ச பேராற்றலை உணர வேண்டும் என்பதும் உணரச்செய்வதும் கருவறையின் உன்னத நோக்கமாகும் ✦








அகஸ்திய தாமரைச்செல்வி அம்மா






ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூவுலகில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பிறக்கிறது. சிலர் தங்களுக்காக வாழ்கின்றனர்; சிலர் சமூகத்திற்காக வாழ்கின்றனர்; ஆனால் மிகச் சிலர் மட்டுமே இறையருளால் மனித குலத்தின் ஆன்மீக விழிப்புணர்விற்காக வாழத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அத்தகைய அரிய ஆன்மீக சிந்தனைகள் உள்ளவர் தான் சிவ சோடசி அகஸ்திய தாமரைச்செல்வி அவர்கள்.
சேலம் மாநகரின் கிச்சிபாளையம் பகுதியில், தந்தையார் தெய்வத்திரு.மா.இராமலிங்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தாயார் திருமதி.இரா.விமலா அவர்களுக்கு ஐந்தாவது திருமகளாக 30 ஜூலை 1977 அன்று பிறந்தார். சிறுவயதிலிருந்தே இறைநம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக சிந்தனைகளின் மீது தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டிருந்தார்.
அவரது குழந்தைப் பருவம் சாதாரணமானதாகத் தோன்றினாலும், அதன் ஆழத்தில் அசாதாரணமான ஆன்மீக அனுபவங்கள் மறைந்திருந்தன. கோயில் கருவறைகளில் விளையாட்டாகச் சென்ற தருணங்களிலேயே அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள், அவரது வாழ்வின் திசையை மாற்றியமைத்தன. காலப்போக்கில் அவை வெறும் அனுபவங்களாக இல்லாமல், இறையின் உண்மையைத் தேடும் ஆழமான ஆன்மீகப் பயணமாக மாறின.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரைச் சேர்ந்த திரு.ரா.துரை அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கையை மேற்கொண்ட அவர், குடும்பப் பொறுப்புகளுடன் ஆன்மீகத் தேடலையும் சமநிலையுடன் தொடர்ந்தார். வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு அனுபவங்களும், இறையருளின் மறைமுக வழிநடத்தல்களும், அவரை மேலும் ஆழ்ந்த தன்னுணர்வு நிலைக்கு அழைத்துச் சென்றன.
கோயில் கருவறைகள் தொடர்பான ஆன்மீக ஆய்வுகளின் வழியாக, மனித ஆன்மாவின் பிறப்பின் நோக்கம், இறை உண்மையின் சாரம் மற்றும் பரம்பொருளின் பேராற்றல் ஆகியவற்றை அவர் ஆழமாக உணர்ந்தார். இந்த உணர்வுகள் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. மனிதன் வெளியில் தேடுகின்ற இறை உண்மை, உண்மையில் அவனது அகத்திலேயே உறைகிறது என்ற பேருண்மையை அவர் அனுபவத்தின் மூலம் அறிந்தார்.
தான் பெற்ற இந்த ஞானம் தனக்குள் மட்டுமே நிலைத்திருக்கக் கூடாது; அது உலக மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஆன்மீக வழிகாட்டுதல் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
மேலும் மனிதன் இறையை வெளியே தேடுவதை விட தன்னுள் இருக்கும் தன்னுடைய ஆன்மாவை உணர்ந்து, மனதின் மாயைகளைக் கடந்து, அகத்திலுள்ள பரம்பொருள் பேரொளியை உணர வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கத்தின் பயனாக உருவானது தான் கருவறை (ஆன்மா தனக்குள் தன்னை அறியும் புனித பயணம்)
அவரது ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், ஆன்மா தன்னிலை உணர்தல், தியானம், இறை வழிபாட்டின் உண்மைப் பொருள், உள்ளுணர்வு வளர்ச்சி மற்றும் பரம்பொருள் அனுபவம் போன்ற உயர்ந்த ஆன்மீகப் பாதைகளை உள்ளடக்கியவை. எளிமையான மொழி, அனுபவ உண்மை மற்றும் நடைமுறை அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் பலரது ஆன்மீக வாழ்வில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஆன்மீக வழிகாட்டுதல்களோடு, தமிழ் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறைகளில் மனித உடல் நலம் மனநலம் காக்கும் பணிகளைச் செய்து வருகிறார். உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றின் சமநிலையே முழுமையான நல்வாழ்விற்கு அடிப்படை என்பதை வலியுறுத்தி, பலருக்கு வழிகாட்டி வருகிறார்.
மேலும், தமிழ் ஆன்மீக மரபு, பக்தி இலக்கியம் மற்றும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகிறார். தஞ்சாவூர் ஓவியங்கள், பக்தி சார்ந்த கலைப் படைப்புகள் மற்றும் கோவில் பாரம்பரியக் கலை வடிவங்களின் மூலம் தென்னிந்திய ஆன்மீக கலாச்சாரத்தின் அழகியலையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் உயிர்ப்புடன் பேணுகிறார்.
அகஸ்திய தாமரைச்செல்வி அம்மா அவர்கள், ஆன்மாவின் தன்னுணர்வு பாதையில் பயணிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். மனிதன் தன்னுள் உறையும் தெய்வீகத்தை உணர்ந்து, பரம்பொருளுடன் ஒன்றிய வாழ்வை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அவரது ஆன்மீகப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவரது வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; ஆன்மாவைத் தேடி இறையுண்மையை உணர்ந்த ஒரு தெய்வீகப் பயணத்தின் சாட்சியமாகும். தான் உணர்ந்த ஆன்மா பற்றிய விழிப்புணர்வையும், இறையையும், ஆன்மீக வழிபாடுகளையும் தன்னைப் போன்றோர்களும் உணர்ந்து வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதே சிவ சோடசி அகஸ்திய தாமரைச்செல்வி அம்மா அவர்களின் உயர்ந்த நோக்கமாகும்.
ஆன்மீக வழியில் வாழும் கலை
கருவறை
ஆன்மா தன்னுணர்தல் பயணம்
அகஸ்திய தாமரைச்செல்வி அம்மா தன் ஆன்மாவைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் தனது நீண்ட கால ஆய்வுகளின் பயனாக உருவானது தான் இந்த கருவறை.
தன்னுள்ளே தான் உணர்ந்த பிரபஞ்ச பேராற்றலை கருவறை ஆன்மாவின் தன்னுணர்தல் பயணம் மூலமாக ஒவ்வொரு ஆன்மாவும் தன்னை தான் உணர்ந்து இப்பூவுலகில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டும் ஒரு அற்புதமான வாழ்வியல் கலையாகும்.
ஆன்மீக வழியில் வாழும் கலை
கருவறை
ஆன்மா தனக்குள் தன்னை உணரும் பொக்கிஷத் திறவுகோல்
ஆன்மா தன்னிலை உணர்ந்து மாற்றம் பெறுவதற்கான உன்னத பயணம்
அகப் பரப்பிரம்ம குருகுலம்
ஆன்மாவின் அகந்தொட்டு பரம்பொருளை அடையும் பேரறிவுப் பயணம்
ஆன்மா தனக்குள் இருக்கும் பிரபஞ்ச இறையாற்றலை உணர்ந்து தானே பரம்பொருள் என்ற உயர்ந்த ஞானத்தைப் பெறுதல். "அகம்" என்பது உள்ளம், "பரம்" என்பது எல்லையற்ற பேருண்மை, "பொருள்" என்பது அந்த உண்மையின் சாரம். இந்த மூன்றும் ஒன்றாக இணையும் இடமே அகப் பரப்பிரம்ம குருகுலம்.
ஆன்மிகம்
ஆன்ம விழிப்புணர்வின் பாதையில் இறைவனை உணரும் பயணம்
ஆன்மிகம் என்பது வெறும் சடங்குகள் அல்ல; அது உள்ளத்தில் இறைவனை உணரும் உயரிய நிலை. தியானம், மந்திர உச்சாடனம், பக்தி, சேவை ஆகியவற்றின் மூலம் ஆன்மா தன்னை இறைவனிடம் இணைத்துக்கொள்ளும் புனிதப் பயணம்.
அகப் பரப்பிரம்ம குருகுலம்
ஆன்மாவின் அகந்தொட்டு பரம்பொருளை அடையும் பேரறிவுப் பயணம்
வெளியில் தேடிய அனைத்திற்கும் வேராக இருப்பது தனது அகமே என்று உணரும் தருணமே உண்மையான ஆன்மீகம்
ஆழ்மனதின் உள்அமைதியில் தான் பரம்பொருளின் முதல் ஒலி அகத்தினுள் பிறக்கிறது.
"நான் இந்த உடல் மட்டும் அல்ல… நான் இந்த சிந்தனை மட்டும் அல்ல… என்னுள் இயங்குவது அந்த பேரொளியின் ஒரு துளி."
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் ஒரு மறைஞானத்தை கற்றுத்தரும் ஆசிரியராக ஆன்மா தன்னுள்ளே மாற்றம் பெறுகிறது.
துன்பம் என்பது விழிப்புணர்வுக்கான கதவு. துன்பத்தில் பிறப்பதே உண்மை ஞானம்
முழு வாழ்க்கையே குருகுலமாக மாறுகிறது — இயற்கை ஒரு குரு, மௌனம் ஒரு குரு, அன்பு ஒரு குரு. ஆன்மா ஒரு குரு
உள்ளத்தில் விழித்தெழும் சுத்தமான ஆன்ம விழிப்புணர்வே உண்மையான குரு.
"நான் தேடிய இறைவன் எங்கோ இல்லை… என் உள்ளத்தின் மௌனத்தில் என்றும் இருக்கின்றான்."
ஒவ்வொரு சுவாசமும் ஒரு மந்திரம்… ஒவ்வொரு அனுபவமும் ஒரு குரு… ஒவ்வொரு அமைதியும் பரம்பொருளின் குரல்…
கருவறை — ஒரு பார்வை









கருவறையில் பிறந்த ஆன்மாவை தொடும் சுரங்கள்
அன்பை தேடி
1 / 19

கருவறை பயணம் — ஒரு கண்ணோட்டம்
BATCH 4 — மாணவர் அனுபவங்கள்
கருவறை - ஆன்மாவின் பயணம்
கருவறை - ஆன்மாவின் பயணம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி விரைவில் வரும் — உங்கள் மின்னஞ்சலை பதிவிட்டு முன்னுரிமை அறிவிப்பு பெறுங்கள்.